Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

யாருகிட்ட பேசுறீங்க….? காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கே. மேட்டுப்பாளையம் பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 6 வருடத்திற்கு முன்பு மாணிக்கம் அதே பகுதியில் வசிக்கும் பிருந்தா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மாணிக்கம் வேறு ஒரு பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இது குறித்து பிருந்தா கேட்டபோது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் பிருந்தா தனது குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் இருந்த மாணிக்கம் தனது வீட்டில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணிக்கத்தின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |