Categories
தேசிய செய்திகள்

பெண்கள் எல்லாரும் பாஜகவுக்கு வாக்களிப்பு…. வெளியான தகவல்…..!!!!!

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் போன்ற 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மார்ச்.10) எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க 245 தொகுதிகளில் முன்னிலை பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. இதையடுத்து சமாஜ் வாதி கட்சியானது 96 இடங்களை பெற்று 2வது இடத்தில் இருக்கிறது. கோவாவில்  மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பா.ஜ.க.-வும், 12 தொகுதிகளில் காங்கிரசும், 2 தொகுயில் ஆம் ஆத்மி கட்சியும், மற்ற கட்சிகள் 8 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.

அதன்பின் உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 42 தொகுதிகளில் பா.ஜ..கவும், 24 தொகுதிகளில் காங்கிரசும், மற்ற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. மணிப்பூர் மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக 31 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சி 7 இடத்திலும், தேசிய மக்கள் கட்சி 10 இடங்களிலும் மற்றவை 12 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் என தெரிகிறது.
5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிற நிலையில், மராட்டிய மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் பாஜகவின் முன்னிலை நிலவரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதாவது “தேர்தல் முடிவுகள் தொடர்பாக ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாக நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். இதனிடையில் அனைத்து பெண்களும் பாஜகவுக்கு வாக்களித்து உள்ளனர். ஆனால் ஆண்கள் சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களித்து இருக்கலாம். பாஜகவை தோற்கடிப்பது என்பது உங்கள் தலையை சுவற்றில் இடித்துக் கொள்வது போன்றது” என்று மராட்டிய மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில் கருத்து கூறினார்.

Categories

Tech |