பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் பாஜகவிற்கு 5 மாநில சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களில் கிடைத்த வெற்றி குறித்த கூறியுள்ளார் . அதில் அவர் கூறியதாவது. “நாங்கள் பாரத பிரதமருடன் பயணிப்போம் என்று மறுபடியும் ஒரு முறை நமது நாடு உரத்த குரலில் சொல்லி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஆளும் கட்சி 33 ஆண்டுகளுக்குப் பிறகு உத்திரபிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இது சாதனை. இதனைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மத அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும், ஆட்சி நடைபெற்று வந்ததை தற்போது பாஜக உடைத்து உள்ளது. இந்த வெற்றி பிரதமர் மோடி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கையாண்ட முறைக்குக் கிடைத்த வெற்றியாக இது கருதப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று வெற்றி கண்ணோட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையில் இன்று பாஜகவிற்கு மக்கள் தீர்ப்பு சாதகமாக மாறி உள்ளது. இதற்கிடையில் கடந்த 2014 ஆம் ஆண்டு மணிப்பூரில் நடந்த தேர்தலில் பாஜகவிற்கு எந்த இடமும் கிடைக்கவில்லை. ஆனால் 2017 ஆம் ஆண்டு 21 இடங்களை பிடித்த பாஜக இன்று தனக்கென தனி பெரும்பான்மையுடன் இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்கிறது.
இந்த நிலையில் மணிப்பூரில் 52 சதவீத சிறுபான்மை சமூகத்தினர் உள்ளார்கள். அங்கு பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது சரித்திர சாதனை. இதனைத் தொடர்ந்து கோவாவிலும் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இது போன்று தமிழகத்திலும் நிகழும் அது 2024 ஆண்டா அல்லது 2026 ஆண்டாக கூட இருக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. மேலும் தேர்தல் ஆணையம் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தயாராகி விட்டதாக கூறியுள்ளது. தமிழக பாஜக கட்சியும் தயாராக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.