Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பிரசித்தி பெற்ற முருகன் கோவில்…. கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பம்…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

புகழ்பெற்ற கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மயிலம் பகுதியில் இருக்கும் மலை மீது பிரசித்தி பெற்ற முருகன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் நேற்று கொடியேற்ற திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. அதன்பிறகு சூரிய வாகனத்தில் முருகன் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து 2-ம் திருவிழாவான இன்று சுவாமி ஆட்டுக்கிடா பல்லக்கிலும், 3-ம் நாள் திருவிழாவில் பூத வாகன பல்லக்கிலும், 4-ம் நாள் திருவிழாவில் நாக வாகன பல்லக்கிலும் முருகப்பெருமான்  காட்சியளிப்பார். அதன் பிறகு வருகிற 13-ஆம் தேதி முருகப்பெருமானை தங்க மயில் வாகன பல்லக்கிலும், 14ஆம் தேதி யானை வாகன பல்லக்கிலும், 15-ஆம் தேதி வெள்ளி மயில் வாகனத்திலும் முருகப்பெருமான் காட்சியளிப்பார். இதைத்தொடர்ந்து 16-ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும் வெள்ளிக் குதிரை வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறும். மேலும் வருகிற 17-ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |