எல்காட் நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தில் (எல்காட்) துறை ரீதியான ஆய்வு கூட்டமானது மார்ச் 9 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இதில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியுள்ளதாவது,
பழமை வாய்ந்த நிறுவனமான எல்காட் நிறுவனத்தின் மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனைத் தொடர்ந்து இரண்டாம் நிலை நகரங்களில் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைப்பதற்கான பணிகள் முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து இந்த இரண்டாம் நிலை நகரங்களில் தொழில்நுட்ப நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் கனக்ட் கருத்தரங்கானது விரைவில் நடைபெற உள்ளது. மேலும் எல்காட் நிறுவனத்தில் காலியாக உள்ள ணியிடங்களை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து எல்காட் நிறுவனமானது நிர்வாக ரீதியாக 2 முழு நேர அதிகாரிகள் வழிகாட்டுதலில் படி முன்னேற்றம் கண்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.