கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டரை வருடங்களாக எஸ்எஸ்எல்சி- பியுசி மாணவர்களில் பல பேர் தேர்வு எழுதவில்லை. அதனை தவிர்க்கும் அடிப்படையில் குறைந்த வருகைப்பதிவு இருந்தாலே தேர்வெழுத அனுமதிக்க கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதாமல் அனைவரையும் “பாஸ்” செய்து அரசு உத்தரவிட்டது. இந்த கொரோனா வைரஸ் ஏற்பட்ட ஆண்டில் எஸ்எஸ்எல்சி, பியுசி மாணவர்களுக்கு தேர்வு எழுவதில் விலக்கு அளிக்கப்பட்டு, அதற்கு முந்தைய தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி பெற்றனர்.
கடந்த வருடமும் எஸ்எஸ்எல்சி -பியுசி முந்தைய தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி பெற வைத்தனர். நடப்பு ஆண்டு கொரோனா உட்பட பல்வேறு காரணங்களால் மாணவர்கள் பள்ளி, கல்லுாரிக்கு வராமல் இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு அனைத்து மாணவர்களும் தேர்வெழுத வேண்டும் என்று கல்வித்துறை முடிவு செய்துள்ளது. ஆகவே இந்த முறை பள்ளி, கல்லுாரி வருகை பதிவேடு குறைந்து இருந்தாலும், அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க தீர்மானித்துள்ளது. இதனிடையில் பி.யு., கல்வித்துறை இயக்குனர் ராமசந்திரன் கூறியபோது ”கொரோனா உட்பட பல்வேறு காரணங்களால் அனைத்து மாணவர்களும் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பி.யு.சி., தேர்வெழுத அனுமதிக்கப்படுவர் என்று கூறினார்.