Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி… பள்ளி, கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!!

திருவாரூர் மாவட்டம் தியாகராஜ கோவில் ஆடித் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 15ஆம் தேதி அந்த மாவட்டத்திற்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் கோவிலில் ஆனி தேரோட்டம் வருகிற 15-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் மிகப் பழமையானதும் , பிரம்மாண்டமான பெரிய கோவிலாகும். இந்த கோயில் நாயன்மார்களால் பாடப் பெற்ற தலங்களில் ஒன்றாகவும் பஞ்சபூத தலங்களில்பிருதிவித் தலமாகவும் திகழ்கிறது.

இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித் தேரோட்டம் நடைபெறும். ஆழி தேரோட்டத் திரு விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தி இருப்பதும் அதனை சுந்தரர் கண்டதும் வரலாறுகள் மூலம் அறிய முடிகிறது. இந்த திருவாரூர் தியாகராஜர் கோயில் கொடியேற்றம் கடந்த மாதம் 20ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.

ஆழித் தேரோட்டம் மார்ச் 15ஆம் தேதி நடைபெற உள்ளதாக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 15ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 15ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் கருவூலங்களும்,  சார்நிலை கருவூலங்கள் அரசின் அவசர அலுவல்களை கவனிக்கும் விதமாக குறைந்த பணியாளர்களுடன் செயல்படவேண்டும். திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் சமூக இடைவெளி முக கவசம் போன்றவற்றை பின்பற்றி தேர் திருவிழாவை சிறந்த முறையில் நடத்த ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |