தேனியில் 250 ஏக்கரில் நல்ல விளைச்சலில் சாகுபடி செய்ய தயார் நிலையில் உள்ள செங்கரும்பை வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி, கூழையூர், துறையூர், உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி வருடம் வருடம் செங்கரும்பு அதிக அளவில் சாகுபடி செய்யப்படும்.. கடந்த ஆண்டு 150 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்ட செங்கரும்பு இவ்வாண்டு சுமார் 250 ஏக்கரில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதில் ஒரு கட்டு கரும்பு ரூபாய் 250 வரை விலைக்கு வியாபாரிகள் கேட்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பயிர் நடவு அதனை சாகுபடி செய்யும் கூலி என அனைத்தையும் சேர்த்தால் ரூபாய் இரண்டிலிருந்து மூன்று லட்சம் வரை செலவு செய்து உள்ளோம். இவர்கள் கேட்கும் விலைக்கு கொடுத்தால் எங்களுக்கு கட்டுபடியாகாது என்று கூறி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தின் திருச்சி கோவை கன்னியாகுமரி என பல்வேறு இடங்களில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டாலும் இந்தப் பகுதிகளில் வளரும் கரும்பு மூலிகை தண்ணீரில் வளர்வதால் இதற்கென தனி சுவையுண்டு. இப்படியான கரும்புக்கு ஒரு கட்டுக்கு ரூபாய் 300 அளித்தால் மட்டுமே விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்று கூறியுள்ளனர்.