Categories
மாநில செய்திகள்

முதல்வரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்…. இனி இவர்களுக்கும் கிடைக்கும்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி…!!

தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஆந்திர மக்களும்  பயன் பெறப்போவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரவாயலில், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மகளிர் அரங்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மா.சுப்பிரமணியன் பேசியுள்ளதாவது, தமிழக முதல்வரை, நடிகை ரோஜா சந்தித்து மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் திருவள்ளூர் மாவட்ட ஆந்திர எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் முதல்வரின் காப்பீட்டுத் திட்டமானது திருவள்ளூர் மாவட்ட எல்லையில் வசிக்கும் ஆந்திர மக்களும் பயன்படுத்த, முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் செயல்படும் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இனி ஆந்திர மக்களும் சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பேசிய அமைச்சர், கடந்த ஆண்டு 1740 பேர் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர். ஆனால் இந்த ஆண்டு சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையானது,  முதல்வரின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 540 ஆக குறைந்துள்ளது என கூறியுள்ளார்.

Categories

Tech |