தடுப்பு சுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாரணம்மாள்புரம் பகுதியில் விக்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து விக்டர் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் தச்சநல்லூர் கணபதி காலனி பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோர தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த விக்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.