Categories
மாநில செய்திகள்

தமிழக இன்ஜினியரிங் மாணவர்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் படித்து வந்தனர். சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் குறைத்ததால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் கல்லூரி மாணவர்கள் வரவுள்ள செமஸ்டர் தேர்வுக்கும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., சார்பாக அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், இன்ஜினியரிங் கல்லூரிகள், பல்கலைகள் போன்றவைகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலனுக்காக பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறது.

அதை சரிவர மேற்கொள்ளாத இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஏ.ஐ.சி.டி.இ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது அந்த எச்சரிக்கையில் உள்ள தகவல்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு காப்பீடு வசதி, தரமான குடிநீர் வசதி, பெரிய வாகனங்கள் செல்லும் வகையிலான சாலைகள், மாற்று மின்சார வசதி, ஆன்லைன் மூலம் குறைதீர் அமைப்பு, ராகிங் தடுப்பு கமிட்டி ஆகியவை கட்டாயம் ஒவ்வொரு துறையின் படிப்புக்கும் பெறப்பட்டுள்ள அங்கீகார விபரத்தை, கல்லுாரி வளாகத்தில் அறிவிப்பு பலகையில் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆன்லைன் வழி கூடுதல் வகுப்புகள் நடத்த வேண்டும் இதுபோன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளா விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |