மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பரப்பாடி மெயின் ரோடு அய்யா கோவில் தெருவில் பொன்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்சார வாரியத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலையரசி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் பொன்செல்வன் வேப்பன்குளம் பகுதியில் இருக்கும் டிரான்ஸ்பார்மரில் வேலை செய்வதற்காக ஏறியுள்ளார்.
அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த பொன்செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொன்செல்வனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.