உக்ரைன், செர்னோபில் அணு உலையில் மின் கட்டமைப்பு சேதமடைந்திருப்பதால் கதிர்வீச்சு வெளியேறக் கூடிய ஆபத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 15-ஆம் நாளாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் பல நகரங்களில் தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர், செர்னோபில் அணு உலையில் மின்வசதியை தரக்கூடிய கட்டமைப்புகள் சேதமடைந்திருக்கிறது.
விரைவில் அதனை சரி செய்யவில்லை எனில் அணு எரிபொருள் சேமிப்பு வசதியினுடைய குளிரூட்டக்கூடிய அமைப்பிலிருந்து அதிகமாக கதிர்வீச்சு வெளிவரும் ஆபத்து உள்ளது என்று கூறியிருக்கிறார். மேலும் ரஷ்யா மேற்கொள்ளும் அபாயகரமான நடவடிக்கைகளால் ஐரோப்பா, ஆபத்தில் மூழ்கியிருக்கிறது என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.