உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மார்ச்.10) எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி 4 மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க தேவையான ஏராளமான இடங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன. அதே நேரம் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கை முன்பும், வாக்கு எண்ணிக்கை செய்யப்படும் நாளன்றும், அதற்கு பின்பும், வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே கூட்டம் கூடுவதற்கும், தேர்தல் ஆணையம் தடை விதித்து இருந்தது. இந்நிலையில் அந்த தடையை நீக்கி தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறைந்துள்ள காரணத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் உள்ளூர் அளவில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஏதேனும் கட்டுப்பாடுகளை விதித்தால், அதற்கு உட்பட்டு இந்த உத்தரவு செல்லுபடி ஆகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Categories