Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி பிப்ரவரி மாத விருது பட்டியலில் …. கேப்டன் மிதாலி ராஜ் இடம்பிடிப்பு ….!!!

ஒவ்வொரு மாதமும் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர் ,வீராங்கனைகளுக்கு ஐசிசி சார்பில் விருது வழங்கி கவரவித்து வருகிறது.அதன்படி பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனைகள் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.இதில் மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இதையடுத்து நியூசிலாந்து அணியில் ஆல் ரவுண்டர் அமெலி கெர்  இடம்பிடித்துள்ளார் .மேலும் ஐசிசி-யின் வாக்கு கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் தலா ஒரு வீரர் ,வீராங்கனை ஐசிசி விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |