ரஜினியின் மருமகனாக நான் ஆசைப்பட்டது இல்லை என்று கூறியுள்ளார் தனுஷ்.
தனுஷ்-ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக குடும்பத்தினர் பலரும் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் இவர்கள் இருவரும் சேர்வதாக இல்லையாம். மேலும் லதா ரஜினிகாந்த் தனக்கு தெரிந்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் தனுஷுக்கு படவாய்ப்புகள் கொடுக்க வேண்டும் என்று கூறிவருகிறாராம். இந்நிலையில் ரஜினி தரப்பினர் தனுஷிடம் சமாதானம் பேச சென்றுள்ளனர்.
அப்போது ரஜினி தரப்பினர், “ரஜினியின் மருமகன் என்பதால் தான் உங்களுடைய வாழ்க்கை இந்தளவுக்கு உயர்ந்துள்ளது. ரஜினியின் மகளை பிரிந்தால் இது நிலைக்குமா? நன்றி மறக்கலாமா? என்று கேட்டுள்ளனர். இதற்கு தனுஷ் கூறியுள்ளதாவது, எனது கெரியர் நன்றாக இருப்பதற்கு ரஜினி காரணம் இல்லை. எனது அப்பா மற்றும் அண்ணன் தான் சினிமா துறைக்கு வர உதவினார்கள். மேலும் எனது கடின உழைப்பே காரணம். ரஜினியின் மருமகன் என்ற பெயரால் எனக்கு இந்த அந்தஸ்து வரவில்லை. மேலும் ரஜினியின் மருமகனாக இருக்க நான் ஆசைப்பட்டதில்லை” என்று கூறியுள்ளார்.