செல்வ ராகவனின் இன்ஸ்டாகிராம் பதிவிற்கு ஐஸ்வர்யாவின் கமெண்ட் பார்த்து ரசிகர்கள் இன்பஅதிர்ச்சியில் உள்ளனர்.
தனுஷ்-ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக குடும்பத்தினர் பலரும் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் இவர்கள் இருவரும் சேர்வதாக இல்லையாம். இருப்பினும் தனுஷ் அண்ணன் குடும்பத்தினருடன் ஐஸ்வர்யா இன்னும் நெருக்கமாக தான் இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா இயக்கிய முசாபிர் பாடல் மகளிர் தினத்தன்று வெளியாகும் என திட்டமிட்டிருந்த நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் பாடலை வெளியிட முடியவில்லை. இதற்கிடையில் ஐஸ்வர்யா தனுஷின் அண்ணன் செல்வராகவன் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
இந்த நிலையில் ‘சாணிக்காயிதம்’ திரைப்படத்தின் புகைப்படத்தை செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிர்விற்கு ஐஸ்வர்யா ‘வாவ்.. செல்வா அத்தான்’ என்று கமெண்ட் செய்துள்ளார். இதனை பார்த்து தனுஷ் ரசிகர்கள் இன்பஅதிர்ச்சியில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஐஸ்வர்யாவின் முசாபிர் பாடல் குறித்து அப்டேட் வெளியான போது செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி வாழ்த்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.