புதிய ரியல்மி 9 5 G Speed Edition ஸ்மார்ட்போனை ரியல்மி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
Realme 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இன்று அறிமுகமாகியுள்ளது. இந்த நிறுவனம் சமீபமாக ரியல்மி 9 ப்ரோ, Realme 9 ப்ரோ ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட் போன்களை வெளியிட்டது. இது பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் விற்பனையாக உள்ளது.
இந்நிலையில் ரியல்மி 9 5 ஜி எஸ்இ உடன் சேர்த்து 3 ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ரியல்மி 9 5 ஜி, ரியல்மி 9 5 ஜி எஸ் இ ஆகிய 2 போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் மார்ச் 14-ஆம் தேதி விற்பனைக்கு வரும். இந்த ரியல்மி SE போனை பொறுத்தவரை 5000 mAh பேட்டரி, 144hz ரெப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளேம் ஸ்நாப்டிராகன் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ரியல்மி 9 5 ஜி எஸ் இ போனில் 6.6” அங்குல முழு அளவு எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே 2412*1080 பிக்சல் திறன் கொண்ட 144Hz ஹெர்ட்ஸ் ரெப்பிரஷ் ரேட் ஆதரவை பெற்றுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் 3 கேமராக்களை கொண்ட அமைப்பை கொண்டுள்ளது. இதில் முதன்மை சென்சாராக Samsung 48 மெகாபிக்சல் f\1.8 அப்பெர்ச்சர் உடனும், 2 மெகாபிக்சல் பிளாக் அண்ட் வைட் சென்சார் f\2.4 அப்பெர்ச்சர் உடனும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் f\2.4 அப்பெரச்சர் உடனும் இருக்கிறது.
ரியல்மி 9 5 ஜி பேட்டரி
இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டோரேஜ் மெமரியாக 128 GP யும், செயல்திறனை ஊக்குவிக்க 6 ஜிபி 8 ஜிபி என 2 ரேம்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனுடன் 30W சார்ஜர், வைபை, ப்ளூடூத் 5.1 ஜிபிஎஸ் மேலும் சில இணைப்பு ஆதாரங்களையும் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் Azure Glow, Starry Glow ஆகிய 2 நிறங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் Flipkart Axis Bank கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 5% விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுகிறது.