*ஒரு சிட்டிகை சீரகம் எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் தண்ணீராக வற்ற வைத்து குடிக்கவேண்டும் .
*உடலுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும் தினசரி பருகுவதால் .ரத்தவிருத்தி ,ரத்த சுத்திகரிப்பு ஆகியவற்றை சீராக சரி செய்யும் .
*இரவு நேரங்களில் சீரக தண்ணீர் பருகுவதால் ஆழ்ந்த உறக்கம் வரும் .
*இளம் வயதில் ஏற்படும் இளநரை ,கண் எரிச்சல் மற்றும் வயிறு எரிச்சல் நீங்கும் .
*வாயில் துர்நாற்றம் ஏற்பட்டாலோ அல்லது பற்சிதைவு ஏற்பட்டாலோ சீரகத்தண்ணி பருகினால் சீராகிவிடும் .
*இரத்த மூலம்,மற்றும் வயிற்று வலிக்கும் சீரக தண்ணீர் ஒரு உகந்த மருந்தாகும் .
*இருமல் ,விக்கல் நிக்கவில்லையா ஒரு டம்ளர் சீரக தண்ணீர் அருந்தவேண்டும் .
*பித்தம் ,அஜீரணம் மற்றும் மந்தம் சீரக தண்ணீர் குடித்தால் சீராகிவிடும் .