Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கொடியேற்றி ஆரம்பம்…. அலைமோதிய பக்தர்கள்…. சிறப்பாக நடைபெற்ற பூஜை….!!

கொடியேற்றி பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவிலில் வருடம் தோறும் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வருடமும் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா மேளதாளங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. பின்னர் திருக்கோவில் சிவாச்சாரியார்கள் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை நடத்தி கொடியை ஏற்றி உள்ளனர். இதனையடுத்து சாமிக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றுள்ளது.

அதன்பின் விழாவை முன்னிட்டு நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் வெவ்வேறு வாகனங்களில் மலர் அலங்காரங்களில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு சாமி காட்சியளித்துள்ளார். இதனை தொடர்ந்து வருகின்ற 13-ஆம் தேதி 63 நாயன்மார்கள் வீதி உலாவும் மற்றும் வெள்ளித் தேரோட்டமும் நடைபெற இருக்கிறது.

மேலும் 14-ஆம் தேதி மகா ரதம் எனப்படும் தேரோட்டம் நடைபெற இருக்கின்றது. பிறகு 17-ஆம் தேதி அதிகாலையில் திருக்கல்யாண திருவிழா வெகு விமரிசையாக நடைபெற இருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் தலைமையிலான குழுவினர் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்.

Categories

Tech |