மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் அருகே உள்ள பாவளம் பகுதியில் குபேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டின் முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். திடீரென அந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போய்விட்டது. உடனே அருகில் இருந்த இடங்களில் குபேந்திரன் தன்னுடைய மோட்டார் சைக்கிளை தேடி பார்த்துள்ளார். ஆனால் எங்கு தேடியும் மோட்டார்சைக்கிள் கிடைக்கவில்லை.
இதேபோன்று அந்தப் பகுதியில் வசிக்கும் செல்வராஜ் மற்றும் ரமேஷ் ஆகியோரின் மோட்டார் சைக்கிளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனித்தனி புகார்களின் பேரில் சங்கராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் பாவளம் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் மோட்டார் சைக்கிளை திருடி விற்றது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சந்திரசேகரை கைது செய்துள்ளனர்.