Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடல”… கண்ணீர் மல்க ஆர்த்தி-கணேஷ்கர் பகிர்ந்த வீடியோ…!!!

அண்மையில் நடந்த விபத்து குறித்து ஆர்த்தி மற்றும் கணேஷ்கர் முதன்முறையாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர்.

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகர்களாக வலம் வருபவர்கள் ஆர்த்தி மற்றும் கணேஷ்கர். இந்நிலையில் சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம் சாலையில் கணேஷ்கர் குடித்துவிட்டு விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியானது. இப்போது ஆர்த்தியும் கணேஷ்கரும் முதன்முதலாக விபத்து குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் கூறியுள்ளதாவது கணேஷ்கர், ஆர்த்தியை புத்தக வெளியீட்டு விழாவில் விட்டுவிட்டு அவருக்காக பட்டினப்பாக்கம் சாலையில் காத்திருந்து பின் அவரை அழைத்து வர சென்றபோது ஸ்பீடு பிரேக்கரை பார்க்காமல் சென்டர் மீடியனில் மோதினாராம். அப்போது அவருக்கு அடிப்பட்டதாம். அதைப்பார்த்த பொதுமக்கள் ஆர்த்திக்கு போன் செய்து நடந்ததை கூறி கணேஷ் கரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்களாம். நாங்கள் தப்பி ஓட வில்லை என கண்ணீர் மல்க விளக்கம் அளித்துள்ளனர்.

Categories

Tech |