சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தச்சநல்லூர் சோதனைச்சாவடி அருகே காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் தாழையூத்து பகுதியில் வசிக்கும் மாரி மற்றும் சுடலைமுத்து என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இருவரும் இணைந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். இதனை அடுத்து மாரி மற்றும் சுடலைமுத்து பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.