சட்ட விரோதமாக கஞ்சா கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் சிவந்திபட்டி சாலை சந்திப்பு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது 5 கிலோ கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் தாழையூத்து பகுதியில் வசிக்கும் ஜேக்கப் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜேக்கப்பை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.