Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற போட்டி…. பரிசு வழங்கிய அதிகாரிகள்…. நன்றி கூறிய செயலர்….!!

அரசு பள்ளியில் வைத்து நடைபெற்ற திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையத்தில் இருக்கும் அரசு உயர் நிலைப்பள்ளியில் வைத்து பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பாக திறனாய்வு போட்டி நடைபெற்றுள்ளது. இதில் இம்மாவட்டத்தில் வசிக்கும் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வடமங்கலம் பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி பயிலும் மாணவர்கள் இவற்றில் கலந்து கொண்டு வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்து மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாநில அமைப்பு ஆணையர் கமலக்கண்ணன் மற்றும் கோமதி ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து முடிவில் இம்மாவட்ட சாரண செயலர் ரவி சங்கர் நன்றி கூறியுள்ளார்.

Categories

Tech |