Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பாக்ஸிங் செய்யும் வீடியோவை பகிர்ந்த பிரபல நடிகை… அடுத்த படத்திற்காகவா? என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்…!!!

நடிகை அபர்ணா பாலமுரளி இன்ஸ்டாகிராமில் பாக்ஸிங் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மலையாள சினிமாவுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அபர்ணா பாலமுரளி. இவர் கடைசியாக தமிழில் நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தொடர்ந்து தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகின்றார். இவரின் கைவசம் தற்போது 8 திரைப்படங்கள் உள்ளது.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்ஸிங் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவை பார்த்த ரசிகர்கள் அடுத்த படத்திற்காக பாக்ஸிங் செய்கிறீர்களா? என்று கேள்வி கேட்டு வருகின்றனர். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் வலம் வருகிறார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |