செடி,கொடிகளை அதிகாரிகள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பார்களா என விவசாயிகள் எதிர்பார்த்து இருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டில் இருந்து பாசனத்திற்காக வாய்க்கால்கள் பிரிந்து செல்கிறது. இதில் பஞ்சமாதேவி அணைக்கட்டு வாய்க்கால் பிரிந்து சோமூர் வரை செல்வதால் 200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. இந்த வாய்க்காலில் பல இடங்களில் அங்கங்கே செடிகள் வளர்ந்து முட்புதர் போல் படர்ந்து கிடக்கிறது. இதனையடுத்து பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கழிவுநீர் கலந்து வருவதால் துர்நாற்றம் வீசி வருகின்றது. இதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் சாலையில் இருக்கும் வாய்க்காலில் ஆகாயத்தாமரைகள் முளைத்து நீர் செல்ல முடியாத அளவில் கிடைக்கின்றது. ஆதலால் தற்போது கோடைகாலம் என்பதால் வாய்க்காலில் இருக்கும் செடி, கொடிகள் அகற்றுமாறும் மற்றும் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். பின்னர் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு அவற்றை அகற்றினால் தான் வாய்க்காலில் தண்ணீர் எளிதில் செல்வதுடன் நிலத்தடி நீர்மட்டம் பெருகவும், விவசாயம் செழிப்பாக நடைபெற உதவியாக இருக்கும் என்பதால் உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்த்து இருகின்றனர்.