விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று சிறு செயலும் கடினமாகத் தோன்றலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை நல்வழியை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அனுகூலத்தை பாதுகாக்கவும். பண வரவு சீராக இருக்கும். வாகனத்தில் மித வேகத்தை பின்பற்றவும். இன்று எல்லா பிரச்சனைகளும் சரியாகும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். வீண் வாக்குவாதங்கள் கொஞ்சம் உண்டாகலாம், அதை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள்.
மனதில் உற்சாகம் பிறக்கும். வீண் பகை கூட ஏற்படலாம், அதையும் கவனத்தில் கொள்ளுங்கள். தீ ஆயுதங்களை கையாளும் பொழுது ரொம்ப கவனமாக கையாள வேண்டும். நண்பர்களிடமிருந்து பிரிய வேண்டியிருக்கும். கௌரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த பணவரவு கொஞ்சம் தாமதப்பட்டு தான் வந்து சேரும். திடீர் சோர்வு போன்றவை ஏற்படும். அடுத்தவரிடம் உங்களது செயல் திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. அதேபோல மற்றவரிடம் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
இன்று மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். மேற்கல்விக்கான முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். காவி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் மற்றும் காவி நிறம்