இயக்குனர் பாலாவின் மீது குற்றச்சாட்டுகளை அள்ளி விட்டுள்ளார் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன்.
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் 2004ஆம் வருடம் முத்து மலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் திருமணமாகி 18 வருடங்களுக்கு பிறகு தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர்.இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் பாலா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது “பாலாவுக்கு நடிகைகள் அழகாக இருந்தால் பிடிக்காது . அதனால் கருப்பு கரியை பூச சொல்லுவார் அல்லது கருப்பு மேக்கப் போட சொல்லுவார். அவர் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் ஊனமாகிவிடுவார்கள். பாலா இயக்கத்தில் விஷால் பெண்ணாகவும் மாற்றுகன் உள்ளவராகவும் நடித்து அதனால் அவர் நீண்ட நாட்களுக்கு பாதிக்கப்பட்டார். மேலும் விக்ரம், சேது திரைப்படத்தில் மன நோயாளியாக நடித்தார். இதனால் நீண்ட நாட்களாக இந்த வியாதி இவரை விட்டு போகவில்லை. பாலா பல நடிகர்களை கஷ்டப்படுத்துபவர். பாலாவுக்கு போதை மற்றும் குடிப்பழக்கம் என இரண்டுமே உள்ளது. சாமி திரைப்படத்தில் விக்ரம் இட்லிக்கு பீர் ஊற்றி பிசைந்து சாப்பிடுவது பாலாவிடமிருந்து வந்தது என குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.