நடிகர் சூர்யா பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் அலுவலகத்தில் வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
இந்த மனுவில் நடிகர் சூர்யா நடித்து கடந்த நவம்பர் மாதம் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் சாதி வன்மத்தை தூண்டும் விதமாக இருந்ததாகவும், அதனால் அவா் வன்னியர்களிடம் பொது மன்னிப்பு கேட்கும் வரை வருகின்ற 10-ஆம் தேதி சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தினை இம்மாவட்டத்தில் இருக்கும் திரையரங்குகளில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என அதில் கூறியிருந்தனர். மேலும் அந்நேரம் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் இல்லாத காரணத்தால் மேலாளரிடம் மனுவை கொடுத்து விட்டுச் சென்றுள்ளனர்.