சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தின் தோகைமலை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குளித்தலை-மணப்பாறை மெயின் ரோட்டில் தனியார் மெஸ் பின்புறமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த மதிவாணன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் அவர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மது பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.