Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதி வேண்டும்…. சிரமப்படும் பொதுமக்கள்…. பேரூராட்சித் தலைவருக்கு மனு….!!

அடிப்படை வசதி வேண்டி பொதுமக்கள் பேரூராட்சி தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள விஸ்வநாதபுரம் பகுதியில் பல வருடங்களாக வசித்து வரும் பொதுமக்களுக்கு உரிய பாதை உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாத காரணத்தால் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து கலெக்டர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு உள்பட பலருக்கு மனு அளித்துள்ளனர். பின்னர் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி தரவில்லை எனில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது தேர்தலைப் புறக்கணிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.

அப்போது தேர்தலுக்குப் பின் சாலை வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்ததால் அவர்கள் தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டுள்ளனர். இதனை அடுத்து மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக சாலை இருப்பதால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் முதியவர் ஒருவரை அப்பகுதி மக்கள் கட்டிலில் படுக்க வைத்து சுமந்து கொண்டே மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

இதேபோல் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இயலாத காரணத்தால் ஒரு சிறுமி இறந்து விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தருமாறு பேரூராட்சி தலைவர் சகுந்தலாவிடம் மனு அளித்துள்ளனர்.

Categories

Tech |