பிஎஃப் வட்டி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
2021-2022 ஆண்டிற்கான பிஎஃப் வட்டி எவ்வளவு என்பது குறித்த ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 8.5 சதவீத வட்டியை நீக்கப்படும் எனவும் பெரும்பாலோனோர் கூறுகின்றனர். ஆனால் தற்போதைய சூழ்நிலையை வைத்து பார்க்கும்போது பிஎஃப் வட்டி 8.35 சதவீதமாகவோ அல்லது 8.45 சதவீதமாகவோ குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ரஷ்யா உக்ரைன் பிரச்சினையால் பங்குசந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் பிஎஃப் வட்டி குறைக்கப்பட அதிகமாக வாய்ப்பு இருப்பதாக ஒரு தரப்பில் கூறப்படுகிறது.
இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. சனிக்கிழமை நடைபெறும் கூட்டத்தில் சேமிப்பதற்கான செட்டில்மென்ட் தொடர்பான முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. pf அமைப்பில் சேமித்து வைத்துள்ள பணத்தில் 100 கோடிக்கு மேல் கிளைம் செய்யப்படாமல் இருக்கிறது. அதை மூத்த குடிமக்களுக்கான நலத்திட்ட நிதி க்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. இந்த 100 கோடி ரூபாய் என்பது கிளைம் செய்யப்படாத தொகையாகவும் அல்லது கிளைம் செய்யப்பட்டதை செட்டில் செய்யாத தொகையாக இருக்கலாம்.
ஆகவே இந்த தொகை பிஎஃப் அமைப்பில் தற்போது இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இது பற்றி இறுதி முடிவு மேற்கொள்ளப்பட்ட பிறகு மூத்த குடிமக்கள் நலதிட்ட நிதிக்கு மாற்றப்படும். மேலும் 2015ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சகம் வெளியே தெரிந்த அறிக்கையின்படி கிளைம் செய்யப்படாத பிஎஃப் தொகை, பிஎஃப் தொகை சிறுசேமிப்பு திட்டத்தில் சேமிக்கப்பட்ட தொகை அனைத்துமே மூத்த குடிமக்கள் நலதிட்டத்திற்கு மாற்றப்பட வேண்டும். அதன் அடிப்படையில் தற்போது பிஎஃப் சேமிப்பு பணம் மாற்றப்பட இருக்கிறது.