இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை வழங்குகிறது. சம்பள கணக்கு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இச்சலுகை கிடைக்கும். விபத்து காப்பீடாக ரூபாய் 20 லட்சம் வரையில் இலவசமாக வழங்கப்படுகிறது.
அந்த வகையில்பஞ்சாப் நேஷனல் வங்கி சேலரி அக்கவுண்ட் வைத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு 20 லட்சம் வரையில் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் ஓவர் டிராப்ட் வசதியும் உள்ளது. இச்சலுகை 4 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது. (அவர்கள் வாங்கும் மாதச் சம்பளம் அடிப்படையில்) சில்வர்சில்வர்ரூ .10,000-ரூ .25,000, கோல்டுரூ .25,001-ரூ .75,000, பிரீமியம்ரூ .75,001-ரூ. 1.50 லட்சம், பிளாட்டினம்ரூ. 1,50,001க்கு மேல் .
மேற்கூறிய பிரிவுகளில் பயனாளிகளுக்கு 20 லட்சம் வரையில் விபத்து காப்பீடு கிடைக்கிறது. மேலும் இது மட்டுமல்லாமல் ஓவர் டிராப்ட் வசதியும் இருக்கிறது. ஊழியரின் கடைசி இரண்டு மாத சம்பளத்தை கடனாக பெற முடியும். பயனாளியின் மாத சம்பளம் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு வராமலிருந்தால் சலுகைகள் அனைத்தும் நிறுத்தப்படும் என்பது இதன் முக்கியமான விதிமுறையாகும்.