Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

திருமண விழாவில் பங்கேற்ற பாலா… அந்தக் கவலையே இல்லையே…!!!

திமுக எம்.பி.தமிழச்சி வீட்டு இல்ல திருமணத்தில் கலந்து கொண்ட பாலா விவாகரத்து பற்றி கவலையே இல்லாமல் பங்கேற்றுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் அண்மையில் தனது மனைவி முத்து மலரை விவாகரத்து செய்தார். இந்நிலையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் இல்லத்தில் நடைபெற்ற திருமண விழாவிற்கு பாலா மற்றும் முத்து மலர் மகளுடன் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்கள் மார்ச் 5ஆம் தேதிதான் விவாகரத்து பெற்றார்கள். ஆனால் விவாகரத்து பற்றி எந்த கவலையும் இல்லாமல் சிரித்த முகத்துடன் திருமணத்தில் பங்கேற்று உள்ளனர். அப்போது பாலா தனது மகளுடன் பேசிக் கொண்டிருந்தார். முத்து மலர் பாடலுக்கு தலையை ஆட்டியபடி கேட்டுக் கொண்டுயிருந்தார். அந்த வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளன.

Categories

Tech |