Categories
தேசிய செய்திகள்

கொடூர விபத்தில் சிக்கி மூளைச்சாவு…. 4 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த சிறுமி…. மருத்துவர் நெகிழ்ச்சி…!!!!

இமாச்சல பிரதேச மாநிலம் மாண்டியாவை சேர்ந்த நய்னா தாக்கூர் என்ற 11 வயது சிறுமி மார்ச் 3ஆம் தேதியன்று கொடூரமான சாலை விபத்தில் சிக்கியதால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து மார்ச் 7ஆம் தேதி அந்த சிறுமி மூளைச்சாவு அடைந்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த அந்த சிறுமியின் குடும்பத்தினர் அவருடைய உறுப்புகளை தானம் செய்து நான்கு பேருக்கு கொடுத்து மறுவாழ்வு அளித்துள்ளார்கள்.

இதுதொடர்பாக பிஜிஐஎம்இஆர் மருத்துவமனை தலைவர் கூறுகையில், சிறுமியின் உறுப்பு தானம் குறித்து அவருடைய குடும்பத்தினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் சம்மதம் தெரிவித்ததால் சிறுமியின் சிறுநீரகங்கள் எடுக்கப்பட்டு நீண்ட காலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு டயலாசிஸ் செய்து கொண்டிருந்த இரண்டு நோயாளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டதன் மூலம் அவர்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. மேலும் அவரிடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட கார்னியாக்கள் இரண்டு பார்வையில்லாத நோயாளிகளுக்கு பார்வையை கொடுத்துள்ளன என்று கூறியுள்ளார்.

Categories

Tech |