விளம்பர நிறுவனம் ஒன்றின் பெண் இயக்குனர், பீகார் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திவாரி மீது பார்லிமென்ட் தெருவில் உள்ள காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் பாலியல் பலாத்காரம் தொடர்பான பிரிவுகளின் கீழ் ராகேஷ் திவாரி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது அந்த பெண் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது நிறுவனத்தை பீகார் கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஒரு போட்டிக்கான விளம்பரப் பணியில் இணைத்துக் கொண்டுள்ளார்.
இருப்பினும் பணி முடிந்த பிறகும் அவர்களுக்கு கிரிக்கெட் சங்கம் ஊதியம் வழங்கவில்லை. இதையடுத்து ராகேஷ் திவாரி ஜூலை மாதம் 12-ஆம் தேதி டெல்லியில் இருந்தபோது அந்த பெண் ஊதியம் குறித்து நேரில் சென்று கேட்க முடிவெடுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ராகேஷ் திவாரி அந்த பெண்ணை 5 ஸ்டார் ஹோட்டலுக்கு ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணிடம் அவர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார. இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.