Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிரசித்திபெற்ற பெரியநாயகி அம்மன்…. சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருகம் அருகில் சித்தலூர் கிராமத்தில் புகழ்பெற்ற பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த வருடமும் கடந்த 1-ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தேர் திருவிழா சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து மயானகொல்லை நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து அம்மனுக்கு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு உற்சவ அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த தேர் திருவிழாவை மாவட்ட பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ அவர்கள் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |