நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.
அவர் மீது சாலை மறியலில் ஈடுபட்டது. ரூபாய் 5 கோடி மதிப்புள்ள மீன் வலை தொழிற்சாலை அபகரிப்பு மற்றும் நில அபகரிப்பு உள்ளிட்ட 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அமைச்சர் ஜெயக்குமாருக்கு மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது அதிமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.