ரெட்மி நிறுவனம் Redmi Smart TV X43 ஸ்மாட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. இந்த டிவியில் 3840 x 2160 பிக்சல் ரெஸலுசன் கொண்ட 43 இன்ச் ஸ்க்ரீன் உள்ளது. அதோடு HDR 10 +, HDR 10 மற்றும் HLG கிடைக்கிறது. 3 HDMI 2.1 போர்ட்கள், ஒரு ஈதர்நெட், இரண்டு USB போர்ட்கள் மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. , இந்த டிவியில் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட குவாட் கோர் சிபியு உள்ளது. புளூடூத் பதிப்பு 5.0 மற்றும் டூயல்-பேண்ட் வைஃபை போன்றவை அளிக்கப்பட்டுள்ளன.
டால்பி ஆடியோவுடன் கூடிய 30W ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இந்த டிவி மாடல் சியோமியின் பேட்ச்வால் யுஐ அடிப்படையில் கூகுள் ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தில் செயல்படுகிறது. இந்த டிவியின் சந்தை விலை மதிப்பு ரூ.29,990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.