கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு முட்புதர்களுக்கு இடையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் அருகே சின்னசேலம் பகுதியில் காகித ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலையின் அருகே இருக்கும் ஒரு முட்புதரில் மரத்தால் செய்யப்பட்ட ஒரு உண்டியல் கிடந்துள்ளது. அவ்வழியே சென்ற சிலர் இந்த உண்டியலை பார்த்து கச்சிராபாளையம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த உண்டியலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்கள் கோவில் உண்டியலில் இருந்த பணத்தை திருடி விட்டு உண்டியலை மட்டும் முட்புதரில் வீசி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.