தமிழகத்தில் பல இளைஞர்கள் படித்தும் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றன. இந்நிலையில் அனைவரும் அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்த நிலை தற்போது மாறி தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பல இளைஞர்கள் பயன் பெற்று வருகின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரியில் வைத்து வருகிற மார்ச் 19ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் 10, 12 மற்றும் ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த முகாமில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் tnprivatejobs.tn. gov. in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.