இந்தியாவில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவு நேற்று வெளியானது. இதில் பஞ்சாப் தவிர நான்கு மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கிறது. இந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் வகையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, “இந்த முறை தேர்தலில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும் சுதந்திரத்துடனும் பாஜகவுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியடைய செய்துள்ளனர். இந்த ஆண்டிற்கான ஹோலி பண்டிகை இப்போதே தொடங்கிவிட்டது. இதற்காக ஓடி ஓடி உழைத்த பாஜக செயல்வீரர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
கோவாவில் கருத்துக்கணிப்புகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி பாஜக இமாலய வெற்றி பெற்றுள்ளது. உத்ரகாண்ட் மற்றும் உத்திர பிரதேசத்திலும் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. இது எனக்கு புதிய உத்வேகத்தை அளிக்கிறது. இதேபோல் இந்த நான்கு மாநிலங்களிலும் பாஜக தற்போது பெற்றுள்ள வெற்றி 2024 ஆம் ஆண்டு தேர்தலிலும் பிரதிபலிக்கும் என நான் நம்புகிறேன்.!” இவ்வாறு அவர் கூறினார்.