முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து இருக்கிறது. அதாவது தனக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிலுவையில் உள்ள வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் ராஜேந்திர பாலாஜி கோரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த நிலையில் அந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து இருக்கிறது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கடந்த 2011 முதல் 2013 ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.