தாய் மற்றும் தந்தையை ஜாமீனில் விடுவிக்க போலியான ஆவணங்களை தாக்கல் செய்த இளம்பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள கொடுங்கையூரில் திவ்யா என்பவர் வசித்து வருகிறார். இவரது தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் ஏலச் சீட்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னை எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் தனது தாய் மற்றும் தந்தையை ஜாமீனில் விடுவிக்க திவ்யா போலியான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார்.
இது குறித்து எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிமன்ற எழுத்தர் நிலவரசி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் போலியான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்த திவ்யா, அதனைத் தயாரித்த கோபால் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.