இமாச்சலப்பிரதேச மாநிலம் கங்ரா மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு பாரா கிளைடிங் செயல்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆம் தேதி பிர் பகுதியில் பாரா கிளைடிங் சாகசத்தின்போது ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். அதுமட்டுமல்லாமல் ஒருவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து பேரிடர் மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் பாரா கிளைடிங் அங்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கங்ரா மாவட்டத்தின் துணை காவல் ஆணையர் நிபுன் ஜின்டால் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையில் மாவட்ட நிர்வாகம் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 4 லட்சம் நிவாரணம் வழங்கி உள்ளது.