Categories
மாநில செய்திகள்

லஞ்சத்தில் புரளும் ஆதார் அலுவலம்…. பாயுமா அரசின் நடவடிக்கை..?? எதிர்பார்ப்பில் மக்கள்…!!!!

தர்மபுரி மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேல் பாட்சாப்பேட்டை பகுதியை சேர்ந்த காதர் பாஷாவின்  மனைவி ஷபானா. இவர் கடந்த 4 மற்றும் 5ஆம் தேதிகளில் தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு ஆதார் மையத்தில் ஆதார் அட்டையில் பிழை திருத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவர் மாற்றுத்திறனாளி தம்பதியை வேண்டுமென்றே அலையவிட்டதாகவும், வெளியே செல்லுமாறு கூறி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

அதனைக் கண்டிக்கும் வகையில் இன்று வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஷபானா அவருடன் கணவருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதேபோல் உடனடியாக ஆதார் எடுக்க  இடைத்தரகர் மூலம் 300 ரூபாய் வசூலிப்பதாகவும்  இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை துள்ளார். தகவலறிந்து வந்த வட்டாட்சியர் கனிமொழி  காவல் ஆய்வாளர்ல க்ஷ்மனதாஸ் இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சுமார் ஒரு மணி ஒரு மணி நேரத்திற்குப் பின் போராட்டம் கைவிடப்பட்டது. வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |