Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மோதலில் ஈடுபட்ட மாணவர்கள்…. திடீர் போராட்டத்தால் பரபரப்பு…!!

பள்ளி மாணவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் இருக்கும் அரசம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில்  பள்ளியில் படிக்கும் இரு தரப்பு மாணவர்களிடையே சில நாட்களாக மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து நேற்று முன்தினம் மீண்டும் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது. அந்த தகவலின்படி போலீஸ் சூப்பிரண்டு பழனி மற்றும் சங்கராபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதன்பிறகு  மோதலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து மாவட்ட கல்வி  அலுவலர் சிவராமனும் அங்கு வந்துள்ளார். அவர்  சாதி, மதம், பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக படித்து முன்னேற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஆனால் மாணவர்கள் இதை காதில் வாங்கிக் கொள்ளாமல் திடீரென சாலையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாணவர்களின் பெற்றோர்களும் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்தனர். இதனையடுத்து அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு  மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்

Categories

Tech |