Categories
தேசிய செய்திகள்

சீக்கிரம் கிளம்புங்க…!!உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க…!! கால அவகாசம் நீட்டிப்பு…!!

முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த கல்வியாண்டில் பிரதமரின் தொழிற்கல்விக்கு விண்ணப்பிக்கும் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

இதனை ஊக்கப்படுத்தும் பொருட்டு இதற்கான விண்ணப்ப தேதியை நீட்டிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடுதல் விபரங்களுக்கு திருப்பூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421 2971127 என்கிற எண்ணில் அணுகலாம். இதற்கு தகுதியுடைய மாணவர்கள் www.ksp.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |