Categories
உலக செய்திகள்

சோனி மியூசிக் நிறுவனத்தின் சேவைகள்: ரஷ்யாவில் நிறுத்தம்…. எதற்காக தெரியுமா?……!!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 16வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையில் உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல தடைகளை உலக நாடுகள் ரஷ்யாவுக்கு விதித்துள்ளன. அதாவது அமெரிக்காவின் பணப்பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு போன்றவை ரஷ்யாவில் தங்களுடையை சேவையை நிறுத்தியுள்ளன. இந்நிலையில் பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான சோனிமியூசிக் ரஷ்யாவில் தனது அனைத்து விதமான சேவை மற்றும் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துவதாக தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சோனி மியூசிக் கூறியதாவது, நாங்கள் உக்ரைனில் வன்முறையானது முடிவுக்கு வரவும் அங்கு அமைதி பிறப்பதற்கும் அழைப்பு விடுக்கிறோம்.
அதாவது நாங்கள் ரஷ்யாவில் எங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்தி உக்ரைனில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ எங்களது உலகளாவிய மனிதாபிமான நிவராண முயற்சியை தொடர்வோம் என்று தெரிவித்துள்ளது. இந்த சேவை நிறுத்த காலத்திலும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த செவ்வாய்கிழமைய யுனிவர்சல் மியூசிக் குழுமம் ரஷ்யாவில் தங்களுடைய சேவைகளை நிறுத்துவதாக அறிவித்து இருந்தது. அதுமட்டுமல்லாமல் வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும் வரும் நாட்களில் அதனுடைய செயல்பாடுகளை நிறுத்தும் என்று தெரிவித்துள்ளது. முன்பே வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த “தி பேட்மேன்” திரைப்படத்தை ரஷ்யாவில் வெளியிடப்போவதில்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |